பலாலி விமான நிலையத்தில் Dutyfree கடை நேற்று திறப்பு | தினகரன் வாரமஞ்சரி

பலாலி விமான நிலையத்தில் Dutyfree கடை நேற்று திறப்பு

 
யாழ்.பலாலி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று சனிக்கிழமை தீர்வையற்ற கடை (Dutyfree) திறந்து வைக்கப்பட்டது. தீர்வையற்ற கடையை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் சந்திரசிறீ,பயணி ஒருவருடன் இணைந்து நாடா வெட்டி திறந்து வைத்தார். நிகழ்வில் வடபிராந்திய சுங்கத் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர், யாழ்.பலாலி விமான நிலையத்தின் பணிப்பாளர் மற்றும்உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். விரைவில் சென்னை- பலாலிக்கிடையிலான விமான சேவை அதிகரிக்கப்படவுள்ளதாக, சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் சந்திர சிறீ தெரிவித்தார்.
- யாழ். விசேட நிருபர்

Comments