சுமதி விருது விழா 2020/2021 சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கு 33 விருதுகள் | தினகரன் வாரமஞ்சரி

சுமதி விருது விழா 2020/2021 சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கு 33 விருதுகள்

2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கான ‘சுமதி விருது வழங்கும் விழாவில், இம்முறை சுயாதீன தொலைக்காட்சிச் சேவை அதிகளவு விருதுகளைப் பெற்றுள்ளது. அந்நிறுவனம் 33 விருதுகளை இவ்விருது விழாவில் பெற்றுக்கொண்டது. இரண்டு வருடங்களுக்கான தொலைக்காட்சி நாடக சிறந்த நடிகர் மற்றும் நடிகைக்கான விருதுகள் சுயாதீன தொலைக்காட்சி சேவையில் ஒளிபரப்பான நாடகங்களுக்கே கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுமதி விருது வழங்கும் இவ்விழா இலங்கைக்கான கொரிய தூதுவர் சந்தோஷ் வுன் ஜிங் ஜியோங்கேவின் தலைமையில் பத்தரமுல்லையில் நடைபெற்றது.

வாழ்நாளில் ஒரு தடவையே வழங்கப்படும் யூ. டபிள்யூ. சுமதிபால விருது, இம்முறை கலைஞர் சனத் குணதிலக்க மற்றும் பாடகி இந்திராணி பெரேராவுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

சுமதி விருது ஆரம்பகர்த்தா திலங்க சுமதி பால உள்ளிட்ட கலைஞர்கள் பலரும் இவ்விருது விழாவில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

லோரன்ஸ் செல்வநாயகம்

Comments