உயிராபத்தை ஏற்படுத்தும் பாதுகாப்பற்ற 07 இலட்சம் வாகனங்கள் பயன்பாட்டில் வடக்கு ரயில் பாதை அபிவிருத்திகள்; | தினகரன் வாரமஞ்சரி

உயிராபத்தை ஏற்படுத்தும் பாதுகாப்பற்ற 07 இலட்சம் வாகனங்கள் பயன்பாட்டில் வடக்கு ரயில் பாதை அபிவிருத்திகள்;

- மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த தெரிவிப்பு
 
வட பகுதிக்கான ரயில் பாதை அபிவிருத்திப் பணிகளில், இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு, போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
 
போக்குவரத்து அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலிலே, அமைச்சர் இந்தப்பணிப்புரையை விடுத்தார்.
 
வவுனியா, அநுராதபுரத்துக்கு இடையிலான இந்தப் பாதைகளின் நிர்மாணப்பணிகள் இந்திய நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டது.
 
அதிகமான ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஏழு இலட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் நாட்டில், பாவனையில் உள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறான வாகனங்களை உலக நாடுகள் பாவனையிலிருந்து மீள உள்பவாங்கியுள்ள நிலையில்,இலங்கையில் இவ்வகையான வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
 
வாயு பலூன் செயற்பாடு உள்ளிட்ட பாதுகாப்பற்ற காரணங்களுக்காகவே,இவை,மீள உள்வாங்கப்படுகி ன்றன.எனினும்,
 
வாயு பலூன் செயற்பாட்டினால் சாரதிக்கு உயிராபத்து விளைவிக்கக் கூடிய மோட்டார் வாகனங்கள் உள்ளிட்ட சுப்பர் ஜீப் வாகனங்கள் நாட்டின் வீதிகளில் ஓடுகின்ற மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
உற்பத்திக் கோளாறுகள் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில்,இவ்வாகனங்கள் மீளப்பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
 
தற்போது மேற்படி வாகனங்களை இறக்குமதி செய்யும் முகவர் நிறுவனங்கள் மூலம், இதுபோன்ற அபாயம் மிக்க வாகனங்களின் உரிமையாளர்களின் விபரங்களை மேற்படி திணைக்களம் பெறவுள்ளது.விபரங்கள் பெறப்பட்டதும்,இவ்வாகனங்களை
 
மீளப்பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திணைக்களத்தின் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
 
உயிர் காப்பு வாயு பலூன் எச்சரிக்கை மிகுந்த வாகனங்களை செலுத்துதல் பெரும் ஆபத்தானவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் உதவி ஆணையாளர் ரி. எம்.எஸ். கே தென்னகோன் அது தொடர்பில் தெரிவிக்கையில்:
 
மீளப் பெற்றுக் கொள்ளப்படும் வாகனங்கள் தொடர்பில் தகவல்களை திரட்டி, ஊடகங்கள் ஊடாக விரைவாக மக்களுக்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Comments