தாய்லாந்தில் பிகினி உடையில் கீர்த்தி சுரேஷ் | தினகரன் வாரமஞ்சரி

தாய்லாந்தில் பிகினி உடையில் கீர்த்தி சுரேஷ்

தெ ன்னிந்திய சினிமாவிலேயே முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு தாய்லாந்து சென்ற அவர், அங்கே பிகினி உடையில் எடுத்துக் கொண்ட நீச்சல் குள புகைப்படங்களை தற்போது வெளியிட்டு இணையத்தின் சூட்டை அதிகரித்துள்ளார்.

குத்தாட்ட பாடல்களுக்கு நடனமாடவே தமிழ் சினிமாவில் பிரத்யேகமாக சில நடிகைகள் இருந்து வந்தனர். கவர்ச்சி உடைகளையும் பிகினி உடைகளையும் அவர்கள் மட்டுமே அணிந்து நடனம் ஆடுவார்கள். ஆனால், அதன் பிறகு ஹீரோயின்களே அந்த விஷயங்களை எல்லாம் உடைத்தெறிந்து கவர்ச்சி நடிகைகளே தேவையில்லாத நிலையில் உருவாக்கி விட்டனர்.

கேரளாவை சேர்ந்த கீர்த்தி சுரேஷ் சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன், ரெமோ உள்ளிட்ட படங்களில் செம ஹோம்லியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். நடிகையர் திலகம் படத்தில் அப்படியே சேலை அணிந்து சாவித்ரியை போலவே திரையில் தோன்றி பலரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

கடந்த ஆண்டு சாணிக் காயிதம் படத்தில் தன்னால் இப்படியும் நடிக்க முடியும் என மிரட்டி இருந்தார் கீர்த்தி சுரேஷ்.

இந்நிலையில், இந்த புத்தாண்டை முன்னிட்டு தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை கீர்த்தி சுரேஷ் அங்கே உள்ள நீச்சல் குளத்தில் பிகினி உடையில் செம கவர்ச்சியாக குளிக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.

இந்த ஆண்டு நடிகை கீர்த்தி சுரேஷ் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலுவுடன் இணைந்து நடித்த மாமன்னன் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். அந்த படத்தை தொடர்ந்து ரகு தாத்தா எனும் படத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். மேலும், தெலுங்கிலும் சில படங்கள் அவரது கைவசம் உள்ளன.

Comments