கெப்பிட்டல் மஹாராஜா குழுமத்தின் புதிய உறுப்பு நிறுவனமாக Premier Herrero (Pvt) Ltd அங்குரார்ப்பணம் | தினகரன் வாரமஞ்சரி

கெப்பிட்டல் மஹாராஜா குழுமத்தின் புதிய உறுப்பு நிறுவனமாக Premier Herrero (Pvt) Ltd அங்குரார்ப்பணம்

கெப்பிட்டல் மஹாராஜா குழுமத்தின் கைத்தொழில் மையத்தின் (Industrial Hub) சமீபத்திய முயற்சியான Premier Herrero (Pvt) Ltd தனது அங்குரார்ப்பண தொழிற்சாலையை பன்னல, சந்தலங்காவவில் அண்மையில் திறந்து வைத்துள்ளது. Premier Herrero (Pvt) Ltd நிறுவனமானது, ‘Guardian’ என்ற வர்த்தகநாமத்தின் கீழ் கட்டுமானப் பொருட்களைத் தயாரிக்கும் ஒரு விசேட நிறுவனமாகச் செயல்படும். ‘Guardian’ கம்பி வலை வேலி (Chain Link Fencing) ஏற்கனவே சந்தையில் நன்கு நிலைபெற்றுள்ள ஒரு வர்த்தகநாமமாகும். Premier Herrero (Pvt) Ltd, அதே வர்த்தகநாமத்தில் தனது சொந்த கட்டுமானப் பொருட்களின் உற்பத்தி வரிசையை தொடர்ந்து விரிவுபடுத்தும்.

தொழிற்சாலையை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வுடன் ஒட்டியதாக, நிறுவனம் தனது முதல் தயாரிப்பான ‘Guardian’ கல்வனைசு செய்யப்பட்ட முட்கம்பியை (Hot Dipped Galvanised Barbed Wire) அறிமுகப்படுத்தியுள்ளது. இது துருப்பிடிப்பை எதிர்க்கும் பண்பைக் கொண்டுள்ளதுடன், சீரான வகுப்பு D துத்தநாக பூச்சு, சீரான கம்பி தடிமன் மற்றும் முட்கம்பிகளுக்கு இடையே சீரான தூர இடைவெளி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அதன் தனித்துவமான பாதுகாப்பான பொதியிடல் மற்றும் பாதுகாப்பாக கையாளுதல் மற்றும் பாதுகாப்பாக பொருத்துவதற்கு வழிவகுக்கின்றன.

Comments