
பிக் பாஸ் சீசன் 6-ல், இலங்கையைச் சேர்ந்த மாடலும், தொலைக்காட்சி தொகுப்பாளினியுமான ஜனனி பங்கேற்றுள்ளார். அவருக்கு ரசிகர்கள் எண்ணிக்கை தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்பற்றுவோர் எண்ணிக்கை, விறுவிறுவென உயர்ந்துள்ளது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 6அண்மையில் தொடங்கியது.
23வயதாகும் ஜனனி மாடலாகவும், தொலைக்காட்சி தொகுப்பாளினியாகவும் பணியாற்றி வருகிறார். பிரபல யூடியூப் சேனலில் இவரது நிகழ்ச்சிகள் நல்ல வரவேற்பை பெற்றன. ஜனனி தற்போது யாழ்ப்பாணத்தில் வசித்து வருகின்றார்.
இலங்கையில் ஐபிசி தமிழ் தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகும் உணவு மற்றும் உடல் நலம் சார்ந்த நிகழ்ச்சிகளை ஜனனி தொகுத்து வழங்கி வருகிறார். ஜனனியும் பிரபல தொகுப்பாளினி லக்சனாவும் இணைந்து டக் டிக் டோக் என்ற காமெடி நிகழ்ச்சியை வழங்கி வருகின்றனர். இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகும். ஜனனியின் முழுப்பெயர் ஜனனி குணசீலன் என்பதாகும். இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்வோர் எண்ணிக்கை விறுவிறுவென உயர்ந்து வருகிறது. பிக் பாஸ் சீசன் 6 முடிவதற்குள்ளாகவே அவரைப் பின்பற்றுவோர் எண்ணிக்கை சில லட்சங்களை தாண்டிவிடும் என்று ரசிகர்கள் கூறியுள்ளனர்.