'ஹரி பொட்டர்' புகழ் ரொபி கொல்ட்ரான் காலமானார் | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

'ஹரி பொட்டர்' புகழ் ரொபி கொல்ட்ரான் காலமானார்

உலகம் முழுவதும் மிகவும் புகழ்பெற்ற “ஹரி பொட்டர்” திரைக்காவியத்தின் “ஹெக்ரிட்” (Hagrid) கதாபாத்திரத்துக்கு உயிரோட்டம் கொடுத்த புகழ்பெற்ற நடிகர் ரொபி கொல்ட்ரான் (Robbie Coltrane) காலமானார்.  

தனது 72ஆவது வயதில்   நேற்று முன்தினம் (14) காலமான ரொபி கொல்ட்ரானின் மறைவு மேற்கத்தைய சினிமா உலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  

ஐக்கிய இராச்சியத்தில் பாரிய ஜனரஞ்சகத்தை கொண்டிருந்த ஹாஸ்ய நடிகரான அவர் கடந்த சில காலங்களாக உடல் நல குறைப்பாட்டால் அவதியுற்றிருந்தார்.  

இந் நிலையில், தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த போதே அவர் நேற்று முன்தினம் இவ்வுலகை  விட்டு பிரிந்தார்.

Comments